செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (15:02 IST)

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

Shankar Jiwal

தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வை தொடர்ந்து அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை டிஎஸ்பியாக பதவியேற்ற சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. உத்தரகாண்டை சேர்ந்த சங்கர் ஜிவால் தமிழ்நாடு டிஜிபியாக பணியாற்றும் முன்பாக சென்னையின் போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள் பணியாற்றியவர்.

 

சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் தற்போது ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது ஓய்வுக்கு பிறகு சென்னையிலேயே தொடர்ந்து தங்கிவிட முடிவு செய்துள்ளதாக சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் அவருக்கு அடுத்து யாருக்கு தமிழக டிஜிபி பதவி வழங்கப்படும் என பல எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான மூன்று பேரின் பெயர்கள் எதிர்பார்ப்பில் உள்ளன. தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால், நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கடராமன் உள்ளிட்டோரில் ஒருவர் தமிழக டிஜிபியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K