1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (11:55 IST)

இனி போலீஸ் பிரச்சினையில்ல.. நிம்மதியில் இரவு கடைகள்! – டிஜிபி போட்ட அந்த உத்தரவு!

Night Food Courts
தமிழ்நாட்டில் இரவு நேர கடைகள், உணவகங்களை மூட சொல்லி காவலர்கள் வற்புறுத்துவது தொடர்பாக டிஜிபி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இரவு நேரக் கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் பணிபுரிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் தொழிலாளிகள் பலர் சாலையோர இரவு நேர சிற்றுண்டி கடைகளை நம்பியே இருந்து வருகின்றனர். பல எளிய மக்களும் இரவு நேர சிற்றுண்டி கடைகள் நடத்தி தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இந்த இரவு நேர கடைகள் செயல்படும்போது காவலர்கள் அந்த கடைகளை மூடும்படி வற்புறுத்துகின்றனர். இதனால் உணவு உண்ண வருபவர்களுக்கும், உணவகம் நடத்துபவர்களுக்கும் சிரமங்கள் எழுகின்றன.

இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு “இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம், உணவகங்களை மூட காவல்துறையினர் வற்புறுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.