வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (18:31 IST)

முதல்வரை சந்தித்தார் புதிய டிஜிபி சைலேந்திரபாபு!

முதல்வரை சந்தித்தார் புதிய டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தின் புதிய டிஜிபியாக இன்று சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் சற்று முன் அவர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
தமிழகத்தின் டிஜிபியாக இருந்த திரிபாதி அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி கடந்த சில நாட்களாக இருந்தது. இதை அடுத்து நேற்று புதிய டிஜிபி சைலேந்திரபாபு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்புகளை டிஜிபி திரிபாதி அவர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை புதிய டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்ட சைலேந்திரபாபு மற்றும் இன்று ஓய்வுபெறும் திரிபாதி ஆகிய இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தம் சந்திப்பு என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வரிடம் இருவரும் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது