தமிழகத்தில் குற்றங்களை தடுக்க முன்னுரிமை! – டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தின் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சைலேந்திரபாபு குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக டிஜிபியாக இதுவரை திரிபாதி பதவி வகித்து வந்த நிலையில் இன்று தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பதவியேற்றுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபுவுக்கு, முன்னாள் டிஜிபி கைகுலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு “இந்த அரிய பொறுப்பை எனக்கு அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தமிழகத்தில் குற்ற செயல்களை தடுக்க முன்னுரிமை அளித்து செயல்படுவேன். முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்படும் புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும்” என கூறியுள்ளார்.