திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரின் அறிவிப்பால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா உள்பட பல்வேறு விஷயங்கள் அடுத்தடுத்து வர உள்ளன இந்த நிலையில் நாளை முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
இருப்பினும் ஆவணித்திருவிழா ஆகமவிதிப்படி கோவிலில் உள்ள பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 10 நாட்கள் தொடர்ச்சியாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்