வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:01 IST)

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 
 
முன்னதாக பள்ளிகள் திறப்பையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது போல கல்லூரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் எனவும் தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.