வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:54 IST)

ஆடி அமாவாசை திருவிழா.. சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி

sathuragiri
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாட இருப்பதை அடுத்து ஆறு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆறு நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
பக்தர்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வனத்துறையின் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva