வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (21:43 IST)

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணில் சொத்து அபகரிப்பு !

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சொத்துகள் அபகரிப்பு !

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்ததாக சர்ச் பாதிரியார்  மற்றும் அவரது மகன் உட்பட 3  பேர்  மீது வழக்குப் பதிவு.

கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 68) கரூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் அந்த புகாரின் அவரது சித்தப்பா மனைவி  நாச்சம்மாள் மற்றும் அவரது மகன் நல்லுசாமி மகள் பாப்பாயி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அருகிலுள்ள சர்ச்சில் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு என்பவரின் பராமரிப்பில் இருந்த வாழ்ந்து வந்தவர்கள். கடந்த 2018 ஆண்டு முதல் தொடர்ந்து அடுத்தடுத்து மகன் நல்லுசாமி மகள் பாப்பாயி மற்றும் நாச்சம்மாள் ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களை உயிழந்ததை உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு அவரது மகன் சாம்மங்கள்ராஜ் மற்றும் சர்ச்சில் பணிபுரியும் ராஜ்குமார் ஆகியோர் உடல்களை புதைத்துள்ளனர்.  மேலும் நாச்சம்மாள் குடியிருந்த வீடு மற்றும் அவரது வீட்டில் இருந்த பணம் நகை ஆகியவற்றை பாதிரியார் துரைக்கண்ணு அபகரித்துக் கொண்டார். இதுகுறித்து கேட்டபோது அவர் எங்களை மிரட்டி வருகிறார் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.  

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆலோசனையின் பேரில் கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு பாதிரியார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாச்சம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மகன் நல்லுசாமி பார்வையற்றவர் என்றும் கூறப்படுகிறது