புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:01 IST)

மக்களைத் தேடி பல் மருத்துவ சேவை!

மக்களைத் தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். 

 
கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி செய்த போது சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பல் மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. இதனை போல தற்போது மக்களைத் தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இன்று துவங்கி வைத்தார். 
 
மேலும் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தில், இரண்டு மருத்துவா்கள் மற்றும் இரண்டு செவிலியா்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களைத் தேடி பல் மருத்துவம் என்கிற வகையில் மருத்துவ சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.