புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:28 IST)

ஜெயில்ல இருந்தபடியே ஜெயிப்பேன்..! – உள்ளாட்சி தேர்தலில் வென்ற சாராய வியாபாரி!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் சிறையில் இருந்தபடியே வெற்றிப்பெற்றுள்ளார்.

வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மீது சாராயம் விற்பனை உள்ளிட்ட சில வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சி 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கிருஷ்ணன் போட்டியிட்டுள்ளார்.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரமும் செய்து வந்த நிலையில் கடந்த 3ம் தேதி அவர் சாராயம் பதுக்கியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் நடந்து முடிந்த தேர்தலில் அவர் 9வது வார்டு கவுன்சிலராக வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.