வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (07:14 IST)

இன்னும் 20 நாட்களில் டெல்டாபிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது டெல்டாபிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்ற செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். தமிழகத்திலும் ஒரு சில நபர்களுக்கு இந்த நோய் பரவியுள்ளதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் டெல்டாபிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது சென்னையில் டெல்டாகிளாஸ் பரிசோதனை மையம் இன்னும் 20 நாட்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்
 
மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள போதிய மருத்துவ ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்றும் உயிரிழப்புகளை வெளிப்படையாக அறிவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம் என்றும் அதை எதிர்கொள்ள கூடிய மருத்துவ வசதிகள் தமிழகத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்