1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (10:29 IST)

உளவுத்துறை என சொல்லி கதிர் ஆனந்தை மிரட்டியது யார்? டில்லி போலிஸார் விசாரணை!

திமுக எம்பியான கதிர் ஆனந்த் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த போது தன்னை உளவுத்துறை அதிகாரிகள் என சொல்லிக்கொண்டு சிலர் வந்து சந்தித்ததாக புகார் அளித்திருந்தார்.

திமுக வின் மக்களவை உறுப்பினர்களில் ஒருவரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் ஆகிய கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் தன்னை சிலர் மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் அளித்த புகார் மனுவில் ‘நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரைக் குற்றச்சாட்டை அடுத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். இதுபற்றி டெல்லி போலிஸாரிடமும் அவர் புகாரளிக்க, இப்போது அதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளது டெல்லி போலிஸ்.