வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (14:39 IST)

சாலையில் அடிபட்ட மானை சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது.. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

Deer
சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய மானை சமைத்து சாப்பிட்ட மூன்று பேரை கைது செய்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலையில் மான் ஒன்று வாகனம் ஒன்றால் மோதி அடிபட்டது. அந்த மான் உயிருக்கு போராடிய நிலையில் அந்த மானை சிகிச்சைக்காக கால்நடைத்துறை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக மூன்று பேர் அதை வெட்டி சமைத்து சாப்பிட்டு உள்ளனர். 
 
இதுகுறித்து அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில் வனத்துறையினர் விரைந்து வந்து மானை சமைத்து சாப்பிட்ட மூன்று பேரை விசாரணை செய்தனர். விசாரணையில் சாலையில் அடிபட்ட மானை அவர்கள் சமைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. 
 
இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva