திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 6 மே 2023 (14:26 IST)

நடிகை நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் பிரபல பாடகி!

நடிகை நயன்தாரா படத்திற்கு பிரபல பின்னணி பாடகி இசையமைக்கவுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர். ஐயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, கஜினி, சந்திரமுகி, குசேலன், சத்யம், வில்லு, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட அவர், இரு குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார்.

தற்போது குழந்தைகளை கவனித்து வரும் அவர் அடுத்து  நடிக்கவுள்ள படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், சித்தார்த், ராஷிகண்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கவுள்ளார்.

இவர்  நான் படத்தில் மக்கயல மக்கயல, அகநக, ராஜா ராணி, மெட்ராஸ் அநேகன் ஆகிய படங்களில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக ஆகவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரரிவித்துள்ளார்.