வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 23 மே 2017 (12:25 IST)

முதல்ல உங்க சிஸ்டத்தை சரிசெய்யுங்க ரஜினி - தீபா விளாசல்

ரஜினியின் அரசியல் பேச்சு குறித்தும் சிஸ்டம் சரியில்லை என்று அவர் பேசியது குறித்தும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து கூறிவிட்ட நிலையில், நேற்று கட்சி ஆரம்பித்து இன்று முதல்வர் கனவில் மிதக்கும் தீபாவிடம் இருந்து இன்னும் எந்த அறிக்கையும் வரவில்லையே என ஏங்கிய கோடானு கோடி (!) தொண்டர்களுக்காக தீபா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போமா!



 


தென்னிந்தியா திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா? தமிழக அரசியல் சிஸ்டத்தை தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா காட்டிய ஆட்சி நிர்வாக தன்மையை பாடமாக ஏற்று எம்ஜிஆரும், அம்மா காட்டிய நிர்வாக திறமையை சரிசெய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக உள்ளனர். தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றறுக்கொள்ள முடியல்லை.

மேலும், காவேரி பிரச்சனையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளரா? நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன்? இந்தி எதிர்ப்பு குறித்து பேசதயாரா? ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வாயை திறக்காதது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா? அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும். ரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று பேசுவதை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை.

திராவிட இயக்க மண் எளிதில் யாரிடமும் ஏமாறாது, ஏமாற்றவும் முடியாது, ரஜினி அரசியல் களம் குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை, தமிழ் மக்கள் உணர்வுகளை கண்ணாடியாக பிரதிபளித்து மக்களின் வேண்டுகளுக்காக இந்த அறிக்கையின் மூலம் மக்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன். இவ்வாறு தீபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீபாவின் இந்த அறிக்கையை ரஜினி எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்து கொள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்