1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (19:56 IST)

நீதிமன்ற உத்தரவு நாங்களே எதிர்பார்க்காதது - தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர்கள்தான் சட்டபூர்வமான வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய தீபா, ‘நீதிமன்ற உத்தரவு நாங்களே எதிர்பார்க்காத என்றும், ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியலற்ற சிலர் முயற்சி செய்கின்றனர் என்றும் என்ன நடந்தாலும் சட்டரீதியாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நியாயமான தீர்ப்புக்கு, நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் சட்டத்தின் முன் யாரும் தப்பிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தீபாவின் இந்த பேட்டியை அதிமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது