புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 28 மே 2020 (23:17 IST)

மாஸ்டர் படம் இன்டர்வெல்லுக்கு பிறகு.... படத்தின் முக்கிய பிரபலம் கருத்து !

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகலாம் அல்லது அதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
 

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இணை எழுத்தாளரான ரத்னகுமார்  இப்படம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் மாஸ்டர் படத்தின் இன்டர்வெல்லுக்கு பிறகு  வேற லெவலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இவரது பேட்டி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றபோதிலும் படம் எப்போது வெளியாகும் என்பது தான் பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.