ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மாதவன் தான் ஆரம்பித்துள்ள ஜெ.தீபா பேரவையில் இல்லை எனவும், அவர் தனியாக கட்சி நடத்துகிறார் எனவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்தார். தொடக்கத்தில் அவருக்கு இருந்த ஆதரவும், வரவேற்பும் நாட்கள் செல்ல செல்ல அவரது செயல்பாடுகளால் வெகுவாக குறைந்துவிட்டது. தீபாவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பின்னால் அவரது நண்பரும் டிரைவருமான ராஜா...