வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (10:18 IST)

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தனித்தேர்வர்களாக +2 தேர்வுகளை எழுதி உரிமைக் கோரப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றுகளை அழிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் பலரும் பள்ளிக்கு சென்று படித்து 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளை எழுதி மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுகின்றனர். இதை கொண்டு குறிப்பிட்ட படிப்பை தகுதியாக கொண்ட வேலைவாய்ப்புகளையோ அல்லது மேற்படிப்பையோ அவர்கள் மேற்கொள்ள முடியும். 

 

ஆனால் பள்ளிகளில் தொடர முடியாமல் இடை நின்றவர்களும் படித்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தனித்தேர்வர்களாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுகின்றனர். தனித்தேர்வர்களுக்கு ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் தனித்தேர்வுகள் நடைபெறுகின்றன.

 

இந்நிலையில் இவ்வாறாக தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வு எழுதிய பலர் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்காமல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை +2 பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் உரிமைக் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K