1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dec 17 sunday ration stores opened in four districts

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்குமா? முக்கிய தகவல்..!

சென்னை
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ரூபாய் 6000 வெள்ள நிவாரண டோக்கன் கொடுக்கும் பணி நடைபெற்று வருவதை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்சாம் புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் நிவாரண தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் வெள்ள நிவாரண தொலைக்கான டோக்கன் தற்போது நான்கு மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியை மேற்கொள்ள வசதியாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை அதாவது டிசம்பர் 17ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. குடும்பமே பலியான அதிர்ச்சி சம்பவம்..!