திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (20:05 IST)

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள்!

vijay makkal iyakkam
சமீபத்தில்  மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டன. இதில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசுடன் இணைந்து, சினிமாத்துறையினரும், சமூக ஆர்வலர்களுடன்   நிவாரண உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளதாவது:

தளபதி  அவர்களின் சொல்லுக்கிணங்க,

கைகோர்ப்போம்_துயர்துடைப்போம்,

வடசென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 35-வது வட்டம், 45-வது வட்டம், 46-வது வட்டம் பெரம்பூர், 72-வது வட்டம்,75-வது வட்டம் திரு.வி.க.நகர்-65 வட்டம், கொளத்தூர்-41-வது வட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் 7 இடங்களில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் சிறப்புமருத்துவமுகாம் வட்டம் நடைபெற்று

மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையும் & ஆலோசனையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல், மத்தியசென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மிக்ஜாம்  புயலால் பாதிக்கப்பட்ட 58,77,99-வது & 108-வது வட்டம், எழும்பூர் 84, 95-வது & 98-வது வட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் 4 இடங்களில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் சிறப்புமருத்துவமுகாம் நடைபெற்று மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையும் மற்றும் ஆலோசனையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்’’என்று தெரிவித்துள்ளனர்.