1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:12 IST)

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு செல்போன் பரிசளித்த சிறுவன்

student
வீட்டில் பணிபுரிந்த பெண்ணுக்கு சிறுவன் செல்போன் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வசித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் தன் வீட்டில் பணிபுரியும் சரோஜா என்ற பெண்ணுக்கு தான் பேட்மிண்டன் போட்டியில் விளையாடி வென்ற பரிசுத் தொகையில் அவருக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அந்த சிறுவன் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த வயதில் அடுத்தவர்களை மகிழ்வித்த சிறுவனின் குணத்தையும் பாராட்டி வருகின்றனர்.