தாயை கொன்றும் திருந்தாத கொடூர மகள்: போலீஸாரிடமே எகிறல்!!
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவி தேவிபிரியா என்பவர் ஃபேஸ்புக் மூலம் விவேக் என்பவருடன் நட்பாக பழகினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு தேவபிரியாவின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தனது தாயை காதலனின் நண்பர்களோடு கொடூரமாக கொலை செய்தார் தேவிபிரியா. இதையடுத்து போலீஸார் விவேக், தேவிபிரியா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்து வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் தேவிபிரியாவை செய்தியாளர்கள் வீடியோ எடுத்தனர். அப்போது தேவிபிரியா எதுக்கு வீடியோ எடுக்குறீங்க? உங்களுக்கு வேற வேலை இல்லையா. அவுங்கல வீடியோ எடுக்க வேண்டாம் என சொல்லுங்கள் என போலீஸிடம் ஆவேசமாக பேசினார்.
தாயை கொன்ற குற்ற உணர்வு சிறிதுமின்றி, அவர் இருப்பதாக தெரிகிறது. வயசு வேகத்தில் இதை செய்திருந்தாலும் கூட, அவர் தாம் செய்தது தவறு என உணரும் போது அவரோடு யாரும் இருக்கமாட்டார்கள். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய இளம் தலைமுறையினரை ஒருபக்கம் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றாலும் கூட, இப்படி பலர் சீரழிந்து போகிறார்கள்.