திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 25 டிசம்பர் 2018 (12:20 IST)

திரிஷாவுடன் டேட்டிங் செய்தேன்.. ஆனால் செட்டாகவில்லை ?ராணா ஓபன்!

திரை காதல் ஜோடிகள் நிஜ காதலர்களாக மாறுவது இயல்பாக நடந்து வருகிறது. அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சமந்தா - நாக சைத்தன்யா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம்.
 
இவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைந்தனர். ஆனால் பலர் காதலிக்கும் போதே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். அப்படி திரிஷா - ராணா இருவரும் காதலித்தார்கள்.
 
ஆனால் திருமணம் ஆகவில்லை பிரிந்துவிட்டார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ராணாவிடம், திரிஷாவுடன் காதல் குறித்து கேட்டபோது, அவர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், காதலித்தோம், டேட்டிங் சென்றோம். ஆனால் சில விஷயங்கள் த்ரிஷாவுடன் செட் ஆகவில்லை என்றார்.