1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (16:30 IST)

மோடி இன்னும் தமிழகத்தை எட்டிப்பார்க்கவில்லை- நடிகை காயத்ரி ரகுராம்

Chennai  flood
அரசியல் ஆதாயம் தேடும் எதிா்க்கட்சிகள் மிகவும் மோசமானது என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பிரதமர் மோடியிடம் நிவாரண  உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்,  சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள் வெள்ளப்பாதிப்புகளில் சிக்கிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். சினிமாத்துறயினர் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அரசியல் ஆதாயம் தேடும் எதிா்க்கட்சிகள் மிகவும் மோசமானது என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தென்சென்னை பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக குறி வைத்துள்ளது. அதனால் அவர்கள் தென் சென்னையில் மட்டுமே வேலை செய்கிறார்கள். மேற்கு மாம்பலம், தி.நகர் பாஜக கவுன்சிலர் மக்களுக்கு என்ன செய்தார் என்று பார்ப்போம்?

மிக்ஜாம் திடீர் வெள்ளத்தை அரசியல் ரீதியாக எடுத்து அரசியல் செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இதே நிலையில் பாஜக இருந்தால் அல்லது வேறு எந்த கட்சியும் கூட இருந்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த நேரத்தில் மோடி இன்னும் தமிழகத்தை எட்டிப்பார்க்கவில்லை. மோடி ஜி ₹5060 கோடி கொடுக்கட்டும். இந்த நேரத்தில் மீனவர்கள், என்.டி.ஆர்.எஃப் எஸ்.டி.ஆர்.எஃப் காவல்துறை மற்றும் தமிழக அரசு பாராட்டத்தக்க பணியை செய்துள்ளது. சென்னை அனைத்து மாவட்டங்களும், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், ஆந்திரா நெல்லூர், மச்சிலிப்பட்டினம், ஒடிசா ஆகிய இடங்களில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென் சென்னையில் மட்டும் பாதிப்பு இல்லை, இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக பாஜகவைச் சேர்ந்த வினோஜ் செல்வன் மட்டும் உண்மையான வெள்ளத்தின் போது மத்திய சென்னையில் பணியாற்றினார். அரசியல் ஆதாயம் தேடும் எதிா்க்கட்சிகள் மிகவும் மோசமானது''  என்று தெரிவித்துள்ளார்.