எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தினத்தினையொட்டி மாபெரும் சைக்கிள் போட்டி

mgr birthday
Last Modified வியாழன், 17 ஜனவரி 2019 (17:19 IST)
கரூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தினத்தினையொட்டி  நடைபெற்ற மாபெரும் சைக்கிள் போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்.


கரூர் சின்ன ஆண்டாங் கோயில் பகுதியில் உள்ள ஐ.ஒ.பி பேங்க் அருகில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தினத்தினையொட்டி., கரூர் ஆண்டாங்கோயில் கீழ்பாகம் கிளை கழகம் சார்பாக மாபெரும் சைக்கிள் பந்தயப்போட்டி நடைபெற்றது. கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த 20 க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மேலும் சின்ன ஆண்டாங்கோயில் ஐ.ஒ.பி வங்கி முன்பு நடைபெற்ற இந்த பந்தயம் அங்கிருந்து தொடங்கி, கரூர் டெக்ஸ்டைல் பார்க் வரை சென்று அங்கிருந்து மீண்டும் தொடங்கிய இடத்திலேயே முடிந்தது.

சுமார் 25 கி.மீட்டருக்கும் மேல் நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயப் போட்டியினை காண ஏராளமான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்தனர். முதல் பரிசு, இரண்டாம் பரிசுகளை திருச்சியை சார்ந்த இருவர்கள் பெற்றனர். இதே போல, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசுகளை கரூரை சார்ந்த இருவர் பெற்றனர். பரிசுகள் பெற்ற நான்குபேருக்கும் நினைவுப்பரிசும் அளித்து பாராட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை அ.தி.மு.க கட்சியின் கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியம், சின்ன ஆண்டாங்கோயில் கிளை கழகங்கள் சிறப்பாக செய்திருந்தது.

சி.ஆனந்தகுமார்


இதில் மேலும் படிக்கவும் :