தவெகவுக்கு எங்கள் ஆதரவு!. அறிவித்த சிவி சண்முகம்!.. தமிழக அரசியலில் பரபரப்பு!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட்டார். அதோடு பல அதிரடி நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்..
ஒருபக்கம் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை செய்து வந்தனர். எனவே அதிமுக இரண்டாக உடைகிறது என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டது.. பல ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டனர்..
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் தமிழக மக்கள் திரு.ஜோசப் விஜய் முதல்வராக வரவேண்டும் என உறுதியாக முடிவெடுத்து தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அதிமுக தோல்வி அடைந்திருக்கிறது. இதை நாங்கள் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.. இது மக்களின் முடிவு.. இப்போது அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை.. அதோடு நாங்கள் தவெகவை முழுவதுமாக ஆதரிக்கிறோம்.
அதே நேரம் அதிமுக தோல்வி குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆராய வேண்டும்.. விரைவில் பொதுக்குழுவை கூட்டி எல்லோரிடமும் ஆலோசனை செய்ய வேண்டும் என சிவி சண்முகம் கூறினார். அதோடு திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடிவெடுத்தார்.. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை என்கிற அதிர்ச்சி செய்தியையும் சிவி சண்முகம் கூறியிருக்கிறார்..