தொடர்புடைய செய்திகள்
- கொரோனா ஊடரங்கில் பாதித்தோர்க்கு உதவும் மாடல் அழகி!
- கொரோனா எதிரொலி… திருப்பூரில் உருவாகும் பிரைவசி திரையரங்கம்!
- இந்தியாவில் புதியவகை கொரோனா பரவியுள்ளதால்? மத்திய அரசு விளக்கம்!
- கொரோனா, புயல், மழை.. பாதிப்புக்குள்ளான பம்புசெட் உற்பத்தி!
- என்னை சந்தித்த அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள் - கொரோனா தொற்று உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்!
ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்இ தேர்வுகள் உண்டா? அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் பள்ளிகள் மட்டுமன்றி கல்லூரிகளிலும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டிலும் சிபிஎஸ்சி உள்பட பல்வேறு தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை என்பதும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனவரி பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுகள் நடக்குமா நடக்காதா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் இருந்தது
இதனை அடுத்து மத்திய கல்வி அமைச்சகம் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2021 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்தே மாணவர்கள் தற்போது குழப்பத்திலிருந்து நீங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
