புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (07:55 IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? முதல்வர் பழனிசாமி தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
ஜனவரி 4ஆம் தேதி முதல் புதுவையில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கும் அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் 
 
மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்பே பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியபோது இந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும் அடுத்த கல்வி ஆண்டில் தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. எனவே பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்