அரசு அலுவலகங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்கவேண்டும்… நீதிமன்றம் கருத்து!
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதத்தில் கட்டப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது சம்மந்தமாக அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக அரசிடம் கேட்டிருந்தது.
இது சம்மந்தமாக தமிழக அரசு சார்பில் 2 மாவட்டங்களில் அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது. ஆனால் இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.