2வது டி20 போட்டி ஒத்திவைப்பு: கொரோனா காரணமா?

ind vs sri
2வது டி20 போட்டி ஒத்திவைப்பு: கொரோனா காரணமா?
siva| Last Updated: செவ்வாய், 27 ஜூலை 2021 (16:48 IST)
இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் இன்று நடைபெற வேண்டிய டி20 போட்டி நாளை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் க்ருணால் பாண்டியா தவிர மற்ற வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்றும் இருப்பினும் அனைத்து வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் சோதனை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் அதன் காரணமாக போட்டி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் வீரர் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் குணம் அடைந்தார் என்பது தெரிந்ததேஇதில் மேலும் படிக்கவும் :