வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:11 IST)

இன்னும் எவ்வளவு காலத்துக்கு நினைவு இல்லம் அமைக்கப் போகிறீர்கள்? நீதிமன்றம் கேள்வி!

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் நினைவு இல்லம் அமைக்க போகிறீர்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்ற சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்றும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் நினைவு இல்லம் அமைக்கப் போகிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றியதை எதிர்த்து தீபக் மற்றும் தீபா தொடர்ந்த வழக்கு தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது