ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு கொடுக்க தடையா?
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது என்பதும் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடா நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பதும் தெரிந்ததே. தற்போது உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்டு வருவதற்கும் ஏர் இந்தியா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற கருத்தை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.