வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (15:10 IST)

கள்ளச்சாராய மரணம் எதிரொலி..! மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு..!

Medical Shop
கள்ளச்சாராயம் மரணம் எதிரொலியாக ஆல்கஹாலின் மூலப் பொருட்களாக இருக்கும் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தமிழகத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
 
தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்துக்கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி  49 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் எதிரொலியாக மருந்து கடைகளில் சானிடைசர் வாங்க செல்வோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
 
அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குவோரிடம் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


ஸ்பிரிட், சானிடைசர் ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவற்றை முறைப்படி விற்க மருத்துக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.