செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (18:42 IST)

காஸ்ட்லி டிவியை ஆட்டைய போட்ட நபர் ... விரட்டிப் பிடித்த மக்கள்

சேலத்தில் உள்ள ஓமலூருக்கு அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் சென்ற திருடன் உள்ளேயிருந்த விலை உயர்ந்த எல்.இ..டி.டிவியை திருடிக்கொண்டு  செல்லும்போது திருடனை மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பாகல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் துரை என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் இவர் வீட்டில் வாங்கிவைத்திருந்த எல்.இ.டி டிவியை வாங்கி வைத்துள்ளார். இதை நீண்ட காலமாக திருடன் நோட்டமிட்டு வந்திருக்கிறான்.
 
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுதில் இன்று காலையில்  டிவியை திருடிக்கொண்டு சென்றுள்ளார். அதை பார்த்த மக்கள் உடனே கூச்சலிட்டு ஓடிச்சென்று அந்த திருடனை பிடித்தனர்.
 
பின்னர் மக்கள் எல்லோரும் சேர்ந்து  திருடனை நாலு சாத்தி சாத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
போலீஸார் தம் பாணியில் விசாரித்த போது, தான் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜ் என்று கூறியுள்ளார். அதன்பின்பு போலீஸார் அவன் மீது வழக்கு பதிவு செய்து நிநிதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர்.
 
பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.