செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (18:54 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 4280 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்  தமிழகத்தில் இன்று மேலும் 4280 பேருக்கு  கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  கொரோனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரொனா பாதிப்பில் இருந்து 2214 பேர் குணமடைந்தனர். பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 60,592 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 37 பேர் உயிரிழந்துள்ளனர்/ எனவே,சென்னையில் மொத்த பலி எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது. இதுவரை சென்னையில் கொரொனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளாது.