1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2020 (19:18 IST)

கொரோனா தடுப்பு பணிக்காக அசிம்பிரேம் ஜி ரூ 1125 கோடி நன்கொடை

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் தொழிலபதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் , இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனித வாழ்வாதார நெருக்கடிகளைச் சமாளிக்க விப்ரோ நிறுவனம் ரூ.1125 கோடி நிதிஉதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. விப்ரோ குழுமம் சார்பில் ரூ.100 கோடியும், அசிம் பிரேம் ஜி சார்பாக ரூ.1000 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் சார்பில் 25ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக திட்டங்களுக்கு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய சிஎஸ்ஆர் நிதிக்கு அப்பாற்பட்டு விப்ரோ நிறுவனம் நிதியுதவி செய்துள்