1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (08:58 IST)

இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று 40க்கும் உள்ளாகவே தமிழகம் முழுவதும் பாதிப்பு இருந்தது என்பதும் தெரிந்ததே
 
கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது 
 
இதுவரை 25 வாரங்கள் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக அரசு நடத்திய நிலையில் இன்று இருபத்தி ஆறாவது மெகா நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா  வைரஸ் தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்று செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்