புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (16:34 IST)

கொரோனா வைரஸின் தாக்கத்தால்.... பெட்ரோல், டீசல் விலை குறைவு !

சீனா நாட்டில் கொரோனா வைரல் தாக்குதலினால் பல நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மத்திய அரசு  அவசியமில்லாமல் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.
சீனா தேசத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெட்ரோல் விலை குறைந்துள்ளது.
 
நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு 27 காசுகளும், டீசல் 30 காசுகளும் குறைந்துள்ளது. 
சென்னையில் பெட்ரோல் லிட்டர் 77.03 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
கொரோனாவைரஸ் பரவும் என்ற பயத்தினால் மக்களின் பொருட்களின் தேவை குறைந்து வருகிறது என்பதால் கச்சா எண்ணெய் விலை  2புள்ளி 43 % சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.