செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (08:36 IST)

சென்னையில் ஏடிஎம் மூலம் பரவும் கொரோனா வைரஸ்: திடுக்கிடும் தகவல்

சென்னையில் ஏடிஎம் மூலம் பரவும் கொரோனா வைரஸ்
சென்னையில் பெரும்பாலான ஏடிஎம்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏடிஎம்களை பயன்படுத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
வங்கியுடன் சேர்ந்து இருக்கும் ஏடிஎம்கள் தவிர தனியாக இருக்கும் ஏடிஎம்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும் அங்கு வாடிக்கையாளர்களுக்காக சானிடைசர் வைக்கப்படுவதில்லை என்றும் இதனால் அவ்வகை ஏடிஎம்களில் இருந்து பயனாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னை மணலி புதுநகர் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 50 நாட்களாக ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருந்த நிலையில் அவர் கடந்த புதன்கிழமை அலுவலகம் சென்று உள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரிடம் விசாரணை செய்தபோது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ஏடிஎம் சென்றதாகவும் அதன் மூலம்தான் தனது கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 
இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் உடனடியாக சானிடைசர் வைக்க வேண்டும் என்று அவ்வப்போது கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. வங்கியுடன் இல்லாமல் இருக்கும் ஏடிஎம்களில் சானிடைசர் வைத்தால் அதனை வாடிக்கையாளர்கள் எடுத்துச் சென்றுவிடுவதாக வங்கி நிர்வாகிகள் கூறுகின்றனர். இருப்பினும் ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்து ஏடிஎம்களிலும் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது