வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 21 மே 2020 (08:02 IST)

இறந்த உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்? இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்

இறந்த உடலில் கொரோனா எத்தனை மணி நேரம் இருக்கும்?
கொரோனா வைரஸ் உயிர் உள்ள மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு மிக வேகமாக பரவி வரும் நிலையில் உயிரற்ற உடலில் அதிக நேரம் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் உயிரிழந்தவர்களின் உடல்களிலும் கொரோனா வைரஸ் பல மணி நேரம் உயிர் வாழும் என்றும் ஆனால் அதே நேரம் அந்த நேரம் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது 
 
உயிரிழந்தவர்களின் உடலில் கொரோனா வைரஸை எவ்வளவு நேரத்திற்கு பின்னர் செயலில் இழக்கும் என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது என்றும் ஆனால் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் உடலில் அந்த வைரஸ் இருந்த நேரத்திற்கும் தற்போது இறந்த உடலில் இருக்கும் வைரஸ் நேரத்திற்கும் பெரும் மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் குறிப்பிட்டுள்ளது
 
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் 70 சதவீதம் ஆல்கஹால் போன்ற சானிடைசர்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின் போது இறந்த உடலின் நாசி மற்றும் வாய் வழியாக உள்ள துவாரங்களில் இருந்து வெளிவரும் வாயுவால் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது 
 
இதன் மூலம் இறந்த உடலில் கொரோனா வைரஸ் எத்தனை மணி நேரம் இருக்கும் என்பது உறுதியாக தெரியாததால் மருத்துவர்கள் முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது