செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:29 IST)

கொரோனா விதிமீறல்: இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வீசத்தொடங்கியதிலிருந்து காவல்துறை, சுகாதாரத்துறை முழு வீச்சில் களத்தில் இறங்கி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 
 
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பாக இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூல் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் தகவல் தெரிவித்தது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 89 லட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.