1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:07 IST)

வீடு வீடாக பரிசோதனை - சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் வீடு வீடாக சென்று பரிசோதனை. 

 
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என பரிசோதனை மேற்கொள்ள தன்னார்வலர்களை களம் இறக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.