துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை: மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

kathir anand
துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை
siva| Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:24 IST)
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சற்று முன்னர் செய்தி வெளியானது

இந்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துரைமுருகன் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி மட்டுமே இருந்தது என்றும் இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்றும் கூறப்படுகிறது.
துரைமுருகனுக்கு செய்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் தான் வந்ததாகவும் துரைமுருகன் தரப்பிலும் அவரது மகன் கதிர் ஆளும் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
இதில் மேலும் படிக்கவும் :