1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. corona cases in pondicherry increases

புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி
புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,436 ஆக அதிகரித்துள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,436 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 986 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,21,631 பேர் குணமடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கேரள பயணத்தை தவிர்க்கவும் - கர்நாடக அரசு