திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (13:01 IST)

சசிகலா இருக்கும் சிறையில் 26 பேருக்கு கொரோனா? அதிர்ச்சியில் சின்னம்மா தரப்பினர்

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் சுமார் இரண்டு லட்சம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும், சுமார் ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சிறை கைதிகளிடமும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை வகித்துவரும் சசிகலா இருக்கும் சிறையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த செய்தியை சிறை நிர்வாகம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒருவேளை இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் சசிகலாவுக்கு ஆபத்து இருப்பதால் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சசிகலா தனி அறையில் உள்ள சிறையில் இருப்பதால் அவருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்றும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சசிகலா இருக்கும் சிறையில் 26 பேர்களுக்கு கொரோனா என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது