செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (08:42 IST)

கிருமி நாசினி குடிச்சா கொரோனா போகாதா? – கேள்வி கேட்ட ட்ரம்ப்பை ஊற போட்டு அடித்த நெட்டிசன்ஸ்!

கொரோனா வைரஸை அழிப்பது தொடர்பாக ட்ரம்ப் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோனா பரவி விட்ட நிலையில் அமெரிக்கா உலகளவில் அதிகமான கொரோனா பலிகளையும், பாதிப்புகளையும் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பலரும் பல்வேறு பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மருத்துவ நிபுணர்களுடனான உரையாடலில் அதிபர் ட்ரம்ப் “கிருமிநாசினி கொரோனாவை கொல்வதால் அதை மனித உடலில் செலுத்தி சோதிக்க முடியாதா?” என கேள்வி எழுப்பியதாக வெளியான தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதை மருத்துவ குழுவினரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் பேசினார் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த அபாயகரமான சூழலில் அவருக்கு கிண்டல் ரொம்ப அவசியமா என்ற ரீதியில் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்ப்பின் பேச்சை தொடர்ந்து இதுகுறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருவதாக லைசால் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிருமிநாசினிகளை கை கழுவுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், அதை குடிப்பதோ, ஊசி மூலம் செலுத்தி கொள்வதோ ஆபத்தான காரிய,. யாரும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் டெட்டால் மற்றும் லைசால் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.