செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (18:06 IST)

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு – விஜயபாஸ்கர் ட்விட் !

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘இதில் முதல் நபர் கலிபோர்னியாவிலிருந்து வந்த 64 வயது பெண்மணி ஆவார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் துபாயிலிருந்து திரும்பிய 43 வயது நபர் ஆவார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இரண்டு பேரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.