புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:50 IST)

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்ட மேலடுக்குச் சுழற்சி காரணமாக சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும், கடலூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்,  திருப்பத்தூர்  உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.