வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (17:48 IST)

பிரசாரத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 கோடி: ஹர்திக் பட்டேலுக்கு விலை பேசும் பாஜக??

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக பட்டேல் இன தலைவர் ஹர்திக் படேல் கூறி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பேசி வருகிறார்.
 
குஜராத்தின் சூரத் நகரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க தொழிலதிபர் மூலம் ரூ .5 கோடி வழங்க முன் வந்ததாக படேல் இன தலைவர் ஹார்டிக் படேல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இது குறித்து ஹர்திக் பட்டேல் கூறியதாவது, சூரத் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க 5 கோடி ரூபாய்க்கு வழங்க முன் வந்தனர். இந்த பெரிய தொகையை வழங்ஜ சூரத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. 
 
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். மேலும், தனது ஆதரவாளர்களிடம் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுங்கள் என கூறினார்.